பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


II 3 செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக் காணுேமென்ருல், இந்த ஆசாரத் திருத்தக்காரரின் சக்தியை குறித்து நாம் என்ன சொல்லலாம்! இவ் வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்த சீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன். முதலாவது விஷயம், ஆசாரத் திருத்த மஹா சபையில் பேசுவோராவது 'உண்மையிலேயே தாம் பேசும் கொள்கையின்படி நடப் பவரா என்பதை நிச்சயித்து அறிந்துகொள்ள வேண்டும். மஹா சபைக்குப் பிரதிநிதிகளாக வந்திருப்போர் அத்தனை பேரிலும், பெரும்பகுதியார், இப்போது உடனே தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னனென்ன சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிருர்கள் என்பதைக் கண்டு பிடித்துப் பத்திரிகைகளில் வெளியிடவேண்டும். நமது மாகாண முழுமையிலும் ஆசாரத் திருத்த விஷயத்தில் சிரத்தையுடையோர் எல்லோரும் இந்த மாதம் திருநெல்வேலிக் கூட்டத்துக்கு அவசியம் வந்து சேர முயற்சி செய்யவேண்டும். இந்தக் கூட்டத்தை யொட்டி மாதர்களின் சபையொன்று நடக்கப்போகிறதாகையால், கல்வி கற்ற மாதர்களெல்லோரும் அவசியம் வந்திருந்து தமக்கு வேண்டிய சீர்த்திருத்தங்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தாயும் பிள்ளையுமானலும் வாயும் வயிறும் வேறு. அவரவருக்கு வேண்டிய விஷயங் ளேக் குறித்து அவரவர் பாடுபட்டாலொழியக் காரியம் திடக்காது. மேலும், நம்நாட்டு ஆண்மக்கள் தமது நிலமையை உயர்த்திக் கொள்ளக்கூடிய சுலபமான யாயங்களைக்கூடக் கையாளத் திறமையற்ருேராகக் ாணப்படுகிரு.ர்களாதலால், நம்முடைய ஸ்த்ரீகளை மன்மைப்படுத்துதற்குரிய காரியங்களை முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல், மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைத் தேடிக்