உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

பெருங் கூட்டம் சேர்ந்தால், அங்கு உத்ஸாஹம் இயல்பாகவே பெருகும் என்பது குறிப்பு.

பொது ஜன உத்ஸாஹமே ஸகல காரியங்களுக்கும் உறுதியான பலமாகும். எனவே, நமது முன்னேற்றத்தின் பரம ஸாதனங்களில் ஒன்றாகிய இந்த ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயத்தில், நம்மவர், ஆண் பெண் அனைவரும், தம்மால் இயன்ற வகைகளிலெல்லாம் உதவி புரிந்து மிகவும் அதிகமான உத்ஸாஹம் காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.


உண்மையான பிராமணன் யார்?

உண்மையான பிராமணன் யாரென்று பாரதியாருக்குத் தெளிவான கருத்து உண்டு. பிராமணன் யார் என்ற கட்டுரையிலே இதை நன்கு விளக்குகிறார். பொய்ப் பெருமைகளையும், போலிப் பெருமைகளையும் நசுக்க வேண்டும் என்பதே பாரதியாரின் கருத்து.


பிராமணன் யார்?
ஓர் உபநிஷத்தின் கருத்து

அஷ்டாதச உப நிஷத்துக்களிலே வஜ்ரஸூசிகை என்பதொன்று. “வஜ்ர ஸூசி” என்றால் வயிர ஊசி என்பது பொருள். இவ்வுபநிஷதம் ‘பிராமணன் யார்?’ என்பதைக் குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கின்றது.

“நான் பிரமாணன், நீ சூத்திரன்” என்று சண்டை போடும் குணமுடையவர்களுக்கெல்லாம் இவ் வேத நூல் தக்க மருந்தாகும். அன்னிய ராஜாங்கத்தாரிடம் ஒருவன் போலீஸ் வேவு தொழில் பார்க்கிறான். அவன் ஒரு பூணூலைப் போட்டுக்கொண்டு, ஏதேனும் ஒரு நேரத்தில், கிராமபோன் பெட்டி தியாகையர் கீர்த்தனைகள் சொல்லு-