118
தையும் காணவில்லை. இன்னும், உடல் பார்ப்பானாயின் தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால், (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின், பிறப்புப்பற்றி பிராமணன் என்ற கொள்வோமென்றால், அதுவுமன்று. மனிதப் பிறவியறிந் ஜந்துக்களிடமிருந்துகூடப் பல ரிஷிகள் பிறந்தார்கள் என்ற கதைகளுண்டு. ரிஷ்யசிருங்கர் மானிலிருந்தும், ஜாம்பூகா நரியிலிருந்தும், வால்மீகர் புற்றிலிருந்தும், கௌதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்ததாகக் கதை கேட்டிருக்கிறோம். அதுபோக, வஸிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர்; வியாஸர் மீன் வலைச்சியின் வயிற்றில் பிறந்தவர்; அகஸ்தியர் கலசத்திலே பிறந்ததாகச் சொல்லுவார்கள். முன்னாளில் ஞானத்தில் பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷிகளின் பிறவிவகை தெரியாமலேயே இருக்கிறது. ஆசையால், பிராமணத்துவம் பிறப்புப் பற்றியதன்று. ஆயின், அறிவினால் பிராமணன் எனக் கொள்வோமென்றால் அதுவுமன்று. க்ஷத்திரியர் முதலிய மற்ற வர்ணத்தவர்களில் கூட அநேகர் உண்மை தெரிந்த அறிவாளிகளாயிருக்கிறாகள். ஆதலால், அறிவுபற்றி ஒருவன் பிராமணல் ஆகமாட்டான். ஆயின், செய்கை பற்றி ஒருவனை பிராமணனாகக் கொள்வோமெனில் அதுவுமன்று. பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற மூவகைச் செயல்களும், ஒரே விதமான இயற்கையுடையனவாகவே காணப்படுகின்றன. முன் செயல்களால் தூண்டப்பட்டு, ஜனங்களெல்லோரும் பின் செயல்கள் செய்கிறார்கள். ஆதலா செய்கைபற்றி ஒருவன் பிராமணனாய் விடமாட்டாள். பின், தாமஞ் செய்வோனைப் பிராமணனாகக் கொள்வோமென்றால், க்ஷத்திரியன் முதலிய நான்கு வருணத்தவரு தாமஞ் செய்கிறார்கள். ஆதலால், ஒருவன் தருமச் செய்-