உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

பாரதியார் 1915-ம்,ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி யில் வெளிவந்த எதிர்ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை என்ற கட்டுரையில் வரதட்சிணையைப்பற்றி அழுத்தமாகக் எண்டிருத்திருக்கிறார்.

எதிர்ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை

நமது தேசத்தில் வறுமை அதிகம். முன்னேயிருந்த வரிகளின் கோழைத்தன்மை, ஒற்றுமைக்குறைவு, சாஸ்திர ஞானமில்லாமை, பலதேச விவகாரங்கள் தெரியாமை, மூடகர்வங்கள் முதலியவற்றால் லக்ஷ்மியை இழந்தோம். மேற்படி குணங்கள் இன்னும் நம்மைவிட்டு நன்றாக நீங்கவில்லை. நாளொன்றுக்குச் சராசரியாக நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு முக்காலணா வரும்படியென்று கணக்காளிகள் சொல்லுகின்றார்கள்; அதாவது, நரகத்துன்பம் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இப்படி இல்லை.

இந்த நிலையில் நமக்குள்ளே பலர் பலவிதமான இழிந்த காரியங்கள் செய்வது வியப்பில்லை. மிகுந்த செல்வமுடைய காடுகளிலேகூட மனிதர் பணத்துக்காக எத்தனையோ மானங்கெட்ட காரியங்கள் செய்கிறார்கள். ஏழைத் தேசத்தாராராகிய நாம் இவ்வளவு மானத்துடன் பிழைப்பதே பெரிய காரியம்.

பணம், பொதுக்கல்வி, விடுதலை மூன்றும் இல்லாவிட்டால் அந்த நாட்டில் மானமேது?

பிராமணருக்குள் விவாஹகாலங்களிலே எதிர் ஜாமீன்கட்கும் வழக்கத்தை நிறுத்திவிடவேண்டும் என்று சில வருஷங்களாகப் பலர் பேசிவருகிறார்கள். மானமுடைய தேசங்களிலே சீதனம் கொடுத்தல் பெண்களின் பெற்றோர் செய்வது சாதாரணமேயாம். ஆனால், மாப்பிள்ளைகளுக்கு