பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 விலைத்தரங்கள் போட்டு, இன்ன பரீகை தேறினவனுக்கு இத்தனை ரூபாய் கிரயம் என முடிவு செய்து வைத்து அதன்படி விவாஹங்கள் நடத்தும் வழக்கமில்லை. சீன, ஜப்பான், நவீன பாரசீகம் முதலிய எல்லா மனுஷ்ய தேசங்களிலேயும் விவாஹம் அன்பையே ஆதாக மாகக்கொண்டு செய்யப்படுகிறது. இங்கே, பணத்துக்காக விவாஹங்கள் செய்து கொள்ளுகிருர்கள். சாதாரணமாகப் பெண்களுக்கு விலைகூறி விற்பது வழக்கமாவே இருந்தது இப்போது 'பூசுரர்” (பூமண்டலத்திலே தேவர்) ஆகிய பிராமணக் கூட்டத்தார் மாப்பிள்ளைக்கு விலை போட்டு விற்கத் தொடங்கி இருக்கிருர்கள். புண்ய பூமி பணம் கொடுக்கச் சொல்லி ஏழைக் குடும்பத்தாரை வகை செய்யும் போதுதான் துன்பம் அதிகப்படுகிறது. பெண்கள். ருதுவாகுமுன்பு விவாகம் நடந்து தீரவேண்டும். ஒரு ஜாதியிலே, ஒரு பிரிவிலே, ஒரு சாகையிலே, ஒரு கிளையிலே, ஒரு பகுதியியிேல, ஒரு வகுப்பிலே, ஒரு கோணத்திலே, ஒரோரத்துக்குள்ளேதான் ஸம்பந்தங்கள் செய்துகொள்ள, லாம். இல்லாவிட்டால் 'ஸ்நாதன அதர்மம்' முட்டி வருகிறது. மாப்பிள்ளைகளோ உயர்ந்த கிரயங்கள் கொடுத்தாலொழிய அகப்படுவதில்லை. முக்கால் வாசிக் குடும்பத்தார் நித்திய ஜீவனத்துக்கு வழியில்லாத ஏழ்ை கள். நாலைந்து பெண்களைப் பெற்றுவிட்டால், இந்: ஏழைகள் என்ன செய்வார்கள்? திருநெல்வேலி ஜில்லாவில் எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்திலே ஒரு பெண்ணுக்கி விவாஹம் நடந்தபோது, இவளுடைய பெற்ருேர் மர் பிள்ளைக்குப் பணங் கொடுத்தார்கள். பிறகு ருது சாந்தியின் போது, அந்த மாப்பிள்ளே, ஐந்நூறு ருபாய் கொடுத்தர்! தான் ருதுசாந்தி செய்து கொள்வேன். இல்லாவிட்டா பெண் உங்கள் வீட்டோடே இருக்கட்டும்' என்று சொல்ன் ஐந்நூறு ருபாய் தண்டம் வாங்கிக் கொண்டான்.