உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

இதுபோலவே சீமந்தத்துக்கும் கிரயம் வாங்கிக் கொண்டான். பிறகு அந்தப் பெண்ணை விலக்கி வைத்துவிட்டு, வேறொரு பெண்ணை விவாகம் செய்து கொண்டு, து. மாமனாரிடத்திலும் முன்னைப் போலவே ‘பண வசூல்கள்’ செய்து வருகிறான். பணம் கொடுக்க வழியில்லாத குடும்பத்தாரும், அவர்களைப் பார்த்துப் பரிதவிக்கும் சிலரும், இந்தவிஷயத்தில் ஏதேனும் சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். கல்யாணமாகாமல் காலேஜிகளில் படிக்கும் பிரமசாரிப் பிள்ளைகள் நமக்குள் கூடி, இனிமேல் மாமனாரிடம் தண்டம் வாங்குவதில்லை என்று பிரதிக்கினை செய்துகொள்ளவேண்டுமென்று சிலர் சொல்லுகிறார்கள். பிள்ளையின் தகப்பனன்றோ பணம் வாங்குகிறான்? அதற்குப் பிள்ளை சபதம் செய்து கொண்டால் என்ன பிரயோஜனம்? நியாயத்தில்கூடத் தகப்பன் வார்த்தையை மீறி நடக்கும் பிள்ளைகள் நமது நாட்டிலே பலரில்லை. இதுவெல்லாம் வீண் வார்த்தை. பெண்களுக்கு விடுதலையுண்டானால் ஒழிய விவாக சம்பந்தமான ஆயிரத் தெட்டு ஊழல்கள் நீங்க வழியில்லை.

பாரதியாரும் சின்னச் சங்கரன் கதையும்

பாரதியார் எழுதிய சின்னச் சங்கரன் கதை முழுக்க முழுக்க நகைச்சுவையும், நையாண்டியும், கிண்டல்களுமாக அமைந்துள்ளது. எந்தப் பக்கத்தை எடுத்துக்காட்டாகத் தரலாம் என்பது இயலாத காரியம். அத்தனை அழகும் வஞ்சப் புகழ்ச்சியும் நிறைந்தது. வேண்டுமானால் சின்னச் சங்கரன் கதையையே முழுவதுமாகப் படித்துக் கொள்ளுங்கள். பாரதியாரின் நகைச்சுவை உணர்வுக்கு இது மிகச்சிறந்த எடுத்துக் காட்டு.

பாரதியார் நகைச்சுவை இல்லாத இடத்திலும்கூட இகைச்சுவையைக் காண்பவர். பாரதியார் நகைப்பு வந்து