124
விட்டால் கடகடவென்று உரக்கச் சிரிப்பாராம். தமிழை இழிவாகப் பேசுதல், பெண்ணை இழிவாகப் பேசுதல், நாட்டை இழிவாகப்பேசுதல் என்றால் பாரதியாருக்கு அடங்காத் கோபம் வந்துவிடும். அப்பொழுது மிகக் கூரிய வசனங்களால் தமது கோபத்தை வெளிப்படுத்தி விடுவார். அடுத்து கணத்தில் அதை மறந்துவிடுவார். நகைச்சுவை வஞ்சம் புகழ்ச்சி மட்டும் பாரதியாருக்கு இயல்பாகவே அமைதிருந்தது என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக் காட்டாக அமைகிறது இந்தக் கதை. இதனால்தான் தமது வறுமை துன்பத்தை மகிழ்ச்சியோடு பொறுத்துக்கொண்டிருந்தா என்பதை, இதுவரையிலும் அவரது கவிதையிலும் உண நடையிலும் பார்த்தோம். நகைச்சுவை என்றால் வெறு வேடிக்கை அல்ல. அது என்றும் நகைப்பை உண்டாக்கவல்லது. படித்துப்படித்து இன்புறலாம். சின்னச் சங்கர கதையையும், இடிப்பள்ளிக்கூடத்தையும், எலிக்குஞ் செட்டியாரையும் இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. எப்பொழுது நனைத்தாலும் சிரிப்பு வரு என்பதில் ஐயமில்லை. வறுமைத் துன்பத்திலும் நமக்கு நகைச்சுவையை அளித்த மகாகவியைப் போற்றுவோம்.
உண்மையான நகைச்சுவை எழுத்தாளர்கள் தமிழி அதிகமாக இல்லை. அந்த வகையிலும் முன்னோடியாக திகழ்ந்த நமது மகாகவியைப் போற்றிப் பாராட்டுவோமாக.
வஞ்சனை செய்து ஜீவிப்பவன் நரி
புனர்ஜன்மம் (2)
புனர்ஜன்மம் என்ற கட்டுரையிலே மனிதனே மிருகமாகின்றான். தேவாங்கு என்றும் வேட்டைநாய் என்று வௌவால் என்றும் கிளிப்பிள்ளை என்றும் மனிதனை பழிக்கிறார். அதே சமயத்தில் தர்மத்தை ஆதரித்