உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாரின்
நகைச்சுவையும் நையாண்டியும்

பாரதியார் ஒர் அற்புதமான மனிதர்; அவரை மேதை என்றும் சொல்லலாம்; மஹாகவி என்றும் சொல்லலாம்; வாராது போல வந்த மாமணி என்றும் சொல்லலாம்.

நெடுநாள் உறங்கிக்கொண்டிருந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பியவர் பாரதியார். தமிழிலே ஒரு புதிய மலர்ச்சி, ஒரு புதிய வேகம் உண்டாக்கியவர் பாரதியார். அதனால்தான் மஹாகவியென்றும், வாராது போல வந்த மாமணியென்றும் சொல்லுகிறோம். 1904 வாக்கில் சுதேசமித்திரனில் ஒர் உதவி ஆசிரியராக சொற்பச் சம்பளம் பெற்றுக்கொண்டு அமர்ந்தார் நமது கவிஞர். 1921லே மறைந்துவிட்டார். ஆகவே, 17 ஆண்டுகளே அவர் தமிழ்ப் பணி புரித்திருக்கிறார், அதிலும் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாகப் புதுவையிலே தஞ்சம்புகுந்து எத்துணையோ துன்பங்கள் அனுபவித்தார். இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர் தமிழ்நாட்டைத் தட்டியெழுப்பி விட்டார், தமிழிலே ஒரு புதிய மறுமலர்ச்சி உண்டாக்கினார் என்று சொன்னால், பாரதியாரை மஹாகவியென்று ஏன் சொல்லக்கூடாது ?