127
குனையே?” என்றும், “மஹாத்மா நீ வாழ்க வாழ்க” என்றும் காந்தி அடிகளை வாயாரப் புகழ்கின்றார் பாரதியார். அவருக்குக் காந்தி அடிகளின் அஹிம்ஸைக் கொள்கையால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் என்று தமது மிக நுட்பமான உள்ளுணர்வு கூறுகின்றது. ஆகவே தான். மஹாத்மா நீ வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றார். ஆனால் கருத்து வேறுபடும்போது, பாரதியாருக்கு யாரிடமும் தயவு தாட்சண்யம் பார்ப்பது பழக்கம் இல்லை. அவருடைய கொள்கைக்கு மாறுபட்டால், அதை உடனே வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமையைக் குறித்தும் இவ்வாறே சொல்வது கவனிக்கத்தக்கது. ஒரு வயதுடைய கைம்பெண்கள் ஆயிரத்துப் பதினாலு பேர்கள் இருக்கின்றார்கள் என்று அறிந்தபோது அவருக்குச் சினத்தீ மூண்டெழுகின்றது. ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் அவருக்கு முற்றிலும் பிடித்தமானதாக இருக்கவில்லை. அதனால்தான் அவருக்குத் தைரியம் இல்லையென்றும், மழுப்புகிறார் என்றும் சொற்களைப் பிரயோகப்படுத்துகின்றார். இக்கட்டுரையை வாசித்து அறிந்தவர்கள் இதன் உண்மையை உணர்வார்கள்.
ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்திர காந்தி (மகாத்மா காந்தி) யால் நடத்தப்படும் “நவஜீவன்” என்ற பத்திரிகையில், ஒருவர் பாரததேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம் செய்திருக்கிறார். அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின்வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.
வயது 0-1 1-2 |
மணம்புரிந்த மாதர் 13212 17753 |
கைம்பெண்கள் 1014 856 |
|