உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

2-3

3-4

4-5

5-10

10-15

49,787

1,34,105

3,02,425

22,19,778

1,00,87,024

1,807

9,273

17,703

94,240

2,23,320




இந்தக் கணக்கின்படி, இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகு முன்னரே விதவைகளாய்விட்ட மாதர்களின் தொகை 1,014! 15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின் தொகை 3 லக்ஷம்! இவர்களில் சற்றுக் குறைய 18000 பேர் ஐந்துவயதுக்குட்பட்டோர்!

இப்படிப்பட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டு அவற்றின் இறுதியில், மேற்படி கடிதம் எழுதியவர். “இக் கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதைப் படிக்கும்போது எந்த மனிதனுடைய மனமும் இளகிவிடும். (இந்நாட்டில்) விதவைகள் என்ற பாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?” என்று சொல்லி வருத்தப்படுகிறார்.

இந்த வியாசத்தின்மீது மகாத்மா காந்தி பத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில், ஸ்ரீமான் காந்தி “மேலே காட்டிய தொகையைப் படிப்போர் அழுவார்கள் என்பது திண்ணம்” என்கிறார். அப்பால், இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும் உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறார். அவற்றின் சுருக்கம் யாதெனில் (1) பால்ய விவாகத்தை நிறுத்திவிட வேண்டுமென்பதும் (2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுடைய கைம்பெண்களும் புனர் விவாகம் செய்து கொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமேயாகும்.