129
ஆனால், இந்த உபாயங்களை விருப்பமுடையோர் அநுசரிக்கலாமென்றும், தமக்கு இவற்றை அநுசரிப்பதில் விருப்பமில்லையென்றும், தம்முடைய குடும்பத்திலேயே பல விதவைகள் இருக்கலாமென்றும், அவர்கள் புனர் விவாகத்தைப்பற்றி யோசிக்கவே மாட்டார்களென்றும், தாமும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ளும்படி கேட்க விரும்பவில்லை என்றும், ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார்.
ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம்
“ஆண்மக்கள் புனர் விவாகம் செய்துகொள்ளுவதில்லை என்ற விரதம் பூணுதலே விதவைகளின் தொகையைக் குறைக்கும் அருமருந்தாகும்” என்று ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயப்படுகிறார். இந்த விநோதமான உபாயத்தை முதல்முறை வாசித்துப் பார்த்தபோது, எனக்கு ஸ்ரீமான் காந்தியின் உட்கருத்து இன்னதென்று விளங்கவில்லை. அப்பால், இரண்டு நிமிஷம் யோசனை செய்து பார்த்த பிறகுதான், அவர் கருத்து இன்னதென்பது தெளிவுபடலாயிற்று. அதாவது, ‘முதல் தாரத்தை சாகக்கொடுத்தவன் பெரும்பாலும் கிழவனாகவேயிருப்பான். அவன் மறுபடி ஒரு சிறு பெண்ணை மணம் புரியுமிடத்தே, அவன் விரைவில் இறந்துபோய் அப்பெண் விதவையாக மிஞ்சி நீற்க இடமுண்டாகிறது. ஆதலால் ஒருமுறை மனைவியை இழந்தோர் பிறகு மணம் செய்யாதிருப்பதே விதவைகளின் தொகையைக் குறைக்க வழியாகும்’ என்பது ஸ்ரீமான் காந்தியின் தீர்மானம்.
சபாஷ்! இது மிகவும் நேர்த்தியான உபாயம்தான். ஆனால், இதில் ஒரு பெரிய சங்கடம் இருக்கிறது. அது பாதெனில், இந்த உபாயத்தின்படி ஆண்மக்கள் ஒரு போதும் நடக்க மாட்டார்கள். மேலும், பெரும்