பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாலும் கிழவர்களே முதல் தாரத்தை இழப்பதாக பூரீமான் காந்தி நினைப்பதும் தவறு. இந்தியாவில் ஆண் களுக்கும் பெண்களுக்கும் சராசரி 25-ம் பிராயத்தில் மரணம் நேருகிறது என்பதை ரீமான் காந்தி மறந்து விட்டார். எனவே, இளம்பிராயமுடைய பலரும் மனைவி யரை இழந்துவிடுகிருர்கள். அவர்கள் ரீமான் காந்தி சொல்லும் சந்நியாச மார்க்கத்தை ஒருபோதும் அநுஷ்டிக்க மாட்டார்கள். அவர்கள் அங்ங்னம் அநுஷ்டிப்பதினின்றும் தேசத்துக்குப் பல துறைகளிலும் தீமைவிளையுமேயன்றி நன்மை விளையாது. ஆதலால் அவர்கள் அங்ங்ணம் துறவு பூணும்படி கேட்பது நியாயமில்லை. ஸ்திரீ-விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ரீமான் காந்தி "புருஷ-விதவை'களின் (அதாவது : புனர் விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின் தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிருர்! இதி னின்றும், இப்போது ஸ்திரீ-விதவைகளின் பெருந்தொகை யைக் கண்டு தமக்கு அழுகை வருவதாக ரீமான் காந்தி சொல்லுவதுபோல், அப்பால் புருஷ விதவைகளின் பெருந் தொகையைக் கண்டு அழுவதற்கு ஹேது உண்டாகும். மேலும், ஆணுக்கேனும், பெண்ணுக்கேனும் இளமைப் பிராயம் கடந்த மாத்திரத்திலே போக விருப்பமும் போகசக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை. உலகத்தின் நலத்தைக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போக இச்சையை அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்கொள்ள முயல்வோரை மாத்திரமே நாம் கண்டிக்கலாம். கிரமமாக ஒரு ஸ்திரீயை மணம் புரிந்துகொண்டு அவளுடன் வாழ விரும்புவோர் வயது முதிர்ந்தோராயினும் அவர்களைக் குற்றம் சொல்வது நியாயமன்று. சிறிய பெண் குழந்தைகளை வயது முதிர்ந்த ஆண்மக்கள் மணம் புரியலாகாதென்பதை நாம் ஒருவேளை