132
தைரியம் இல்லை; மழுப்புகிறார். எல்லா விதவைகளும் மறுமணம் செய்துகொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாதருக்குச் செய்யப்படும், அநியாயங்கள் எல்லா வற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற்குத் தகுந்த மாற்று. மற்றப் பேச்செல்லாம் வீண் கதை.
அன்மொழித்தொகை ஹாஸ்யம்
பெரும்பாலும் இலக்கணத்திலே நகைச்சுவைக்கு இடம் இருக்காது. இலக்கணத்திலும் நகைச்சுவை காண் பவர் பாரதியார். இதை நீங்களே படித்து அறிந்து கொள்ளலாம்.
கல்வி சம்பந்தமாக இன்னுமொரு மேற்கோள்: கிச்சடியே “மேற்கோள் கிச்சடி” தானே? மிஸ்டர் ஆர்ச்செர் என்ற ஒரு ஆங்கிலேயர் சில தினங்களின் முன்பு லண்டன் பத்திரிக்கை யொன்றில் கல்வியைப் பற்றி எழுதிக் கொண்டு வரும்போது, "இங்கிலாந்திலே இப்பொழுது கல்விக்கு மூலாதாரமாக வசன காவியங்களையும், செய்யுட் காவியங்களையும் வைத்திருப்பது சரியில்லை. ஸயன்ஸ் [இயற்கை நூல்) படிப்புதான் மூலாதாரமாக நிற்க வேண்டும்” என்கிறார்.
இவருடைய கொள்கை பலவித ஆக்ஷேபங்களுக்கிடமானது. ஆனால், தனிப்பள்ளிக்கூடங்கள் எந்த முறையை அனுசரித்த போதிலும், ராஜாங்கப் பள்ளிக்கூடத்தார் இவருடைய கொள்கையைத் தழுவியே படிப்பு நடத்த வேண்டுமென்று நான் நினைக்கிறேன். கற்பனையும், அலங்காரமும் எனக்குக்கூட மிகவும் பிரியந்தான். ஆனால், “நெல் எப்படி விளைகிறது?” என்பதைக் கற்றுக் கொடுக்காமல், அன்மொழித் தொகையாவது யாது? என்று