பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i & 4 புத்தி விவேகமில்லாதவன்; -புலி போல உடல்வலி கொண்டவன்;-கரை தத்தி வழியுஞ் செருக்கினல்; -கள்ளின் சார்பின்றியே வெறிசான்றவன்;-அவ சக்தி வழிபற்றி நின்றவன்; -சிவ சக்தி நெறி உணராதவன்;-இன்பம் நத்தி மறங்கள் இழைப்பவன்;-என்றும் நல்லவர் கேண்மை விலக்கினேன்; அண்ண ைெருவனை யன்றியே;-புவி அத்தனைக் குந்தலை யாயினுேம்;-என்னும் எண்ணந்தனதிடைக் கொண்டவன்;-அண்ணன் ஏது சொன்னலும் மறுத்திடான்:-அருட் கண்ணழி வெய்திய பாதகன்; இவ்வாறு குணம் படைத்தவனைப் பாஞ்சாலியைச் சென்று அழைத்து வரும்படியாக, அரவக்கொடியோனகிய துரியோதனன் ஏவுகின்றன். துரெளபதிக்கும் துச்சாதன னுக்கும் வாக்குவாதம் நடைபெறுகின்றது, மாதவிலக் கால் ஒர் ஆடைதனிலிருக்கின்றேன்' என்று சொல்லியும் பார்க்கிருள் பாஞ்சாலி. என்ன சொல்லியும் துச்சாதனன் மனம் மாறவில்லை. பாஞ்சாலி கூந்தலினைக் கையில்ை பற்றிக் கரகரவென இழுத்துச் செல்கின்ருன். பாஞ்சாலி ஐயகோ என்று அலறுகின்ருள். 'என்ன கொடுமையிது என்று பார்த்திருந்தாரே தவிர, ஊர்மக்கள் அதைத் தடுக்க முயற்சி செய்யவேயில்லை. பாரதியாருக்கு இந்த அவலத்தை நினைத்து, கோபம் மூண்டெழுகின்றது. அவர் உரைத்த அனல்கக்கும் கவிதை வரிகளை, அவர் வாக்கிலேயே கேட்போம். ‘என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார். ஊரவர் தங்கீழ்மை உரைக்குந் தரமாமோ?