பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 சி. சுப்பிரமணியபாரதியார் பெரிய தனவந்தர் அல்ல இருந்தாலும், இந்தியா போன்ற வார இதழுக்கும் இன்னும் பல இதழ்களுக்கும் அவர் ஆசிரியராகப் பொறுப் பேற்று உற்சாகத்துடன் நடத்திவந்திருக்கிருர். அவருடைய உற்சாகத்திற்கு அளவேயில்லை. இந்தியா வாரஇதழ் மூலமும், கவிதைகளாலும், கட்டுரைகளாலும், கதை களாலும் ஒரு பெரிய வலிமைவாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ் யத்தையே எதிர்த்துப் போரிடத் துணிந்திருக்கிருர், திரு. எஸ். ஜி. ராமனுஜலு நாயுடு அவர்கள், தமது 'சென்றுபோன நாட்கள்' என்ற பாரதியாரது நினைவுக் குறிப்பிலே, "இந்தியா வாரஇதழ் நெருப்புமழை பொழிய லாயிற்று' என்று எழுதியுள்ளார். ஒரு வலிமைவாய்ந்ததும் "எங்களுடைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே சூரியன் அஸ்தமிப்பதேயில்லை' என்று மார்தட்டிப் பெருமைபேசிக் கொள்ளும்படியாகவும் இருந்த அந்நிய ஆதிக்கம் கம்மா பார்த்துக் கொண்டிருக்குமா? உடனே அதன் முழு அடக்கு முறையும் கையாளலாயிற்று. இந்தியா வார இதழ் ஆசிரியரான திரு. ரீனிவாசன் கைதி செய்யப்பட்டார். பாரதியார் உண்மையில் இந்தியா வாரஇதழின் ஆசிரியராக இருக்கவில்லை. ஆகவே தப்பினர். ஆனால், பூரீசுப்பிரமணிய பாரதியாரையும் கைது செய்ய முயற்சிகள் நடந்தன. இதை அறிந்த பாரதியாரின் நண்பர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்தார்கள். பாரதியார் பிரன்ஞ்சு ராஜ்யமான பாண்டிச்சேரிக்குத் தப்பிச் செல்வது நல்லது என்றும், அங்கிருந்துகொண்டு தமிழ்ப்பணி செய்யலா மென்றும் தீர்மானம் ஆயிற்று. பாரதியார் இவ்வாறு பாண்டிச்சேரிக்கு 1908-ஆம் ஆண்டில் தப்பிச் சென்ருர். இந்தியா வாரஇதழ் மீண்டும் வெளிவரலாயிற்று. அதன், வேகமோ தாக்குதலோ குறையவில்லை.