பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சோர்வடையாமலிருக்க, பாரதியாருடைய இயல்பான நகைக்சுவையும் நையாண்டியுமே காத்திருக்கின்றது என்று கூறலாகும். இவ்வாறு நகைச்சுவை குமிழியிட்டுக் கொண்டு வரும் பாரதியாரை, வறுமைக் கனலாலும் பலவித இன்னல் களாலும் அகால மரணமடையத் தமிழ் மக்கள் செய்து விட்டார்கள். புதுவையிலிருந்து வெளிவந்து, பாரதி பண்ணை என்று பல நூல்கள் வெளியிட உற்சாகத்தோடு திட்டமிட்டு வெளியிட்டதற்கும், ஆதரவோ பரிவோ காட்டவில்லை அக்காலத் தமிழர்கள். இதை நினைந்து அழுவதா சிரிப்பதா நையாண்டி செய்வதா வஞ்சப் புகழ்ச்சி பேசுவதா என்பதைத் தமிழர்களின் மனச் சான்றுக்கே விட்டுவிடுகின்றேன். வாராது போல வந்த மாமணியை, மேதையை, மஹாகவியைத் தோற்று விட்டோம் என்பதே என் நெஞ்சத்தின் ஒரு மூலையில் குற்ற உணர்வோடு பளிச்சிடும் எண்ணமாகும்.