11
ஆகவே, பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் தன் கைவரிசையைக் காண்பிக்கலாயிற்று. இந்திய வாரஇதழ் தமிழகத்திற்கு வரக்கூடாதென்று சட்டம் செய்தது. இதனால் பாரதியார் நடத்திய இந்தியா வார இதழ் கர்மயோகி, சூரியோதயம், விஜயா, பால பாரதம் முதலிய எல்லாப் பத்திரிக்கைகளும் ஆதரவு குறைந்ததால் நின்று போய்விட்டன. ஆனால், பாரதியாருடைய எழுத்துப்பணி நின்றுபோகவில்லை. கண்ணன் பாட்டு, குயிற்பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம் முதலியவற்றை அவர் எழுதத் தொடங்கினார்.
சுமார் பத்து ஆண்டுக்காலம் பாரதியாரும் அவர் குடும்பமும் வறுமையால் பீடிக்கப்பட்டுப் பலதுன்பங்களுக்கு ஆளாகினர். 1915-ஆம் ஆண்டு ஜூலைமாதம் 2ஆம் தேதி ‘சித்தக்கடல்’ என்ற பாரதியார் , குறிப்பிலே இது நன்கு தெரிகின்றது. இவர் எழுதுகிறார்:
“மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாய்! பராசக்தீ, எனது கருவி கரணங்களிலே நீ பரிபூர்ணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங்ஙனமே காக்க வேண்டும்.
இன்பமில்லையா?
பராசக்தி, இந்த உலகத்தின் ஆத்மா நீ.
உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?
முதலாவது, எனக்கு என்மீது வெற்றிதர வேண்டும்.குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய்விட்டது. இரண்டு மாதகாலம் இரவும் பகலு-