பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பதுபோல, துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை; இருவருக்கு உறக்கம் நேரே வரவில்லை-இருவருக்கும் எப்போது சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தி, உன்னே நம்பி, தானிருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினும் உன்னை வாழ்த்துகிறேன். கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம் குழப்பம்-தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்த.ை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! பராசக்தி, ஒயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கு படி திருவருள் செய்யமாட்டாயா? கடன்களெல்லா தீர்த்து, தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரு என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் உன் புக,ை ஆயிரவிதமான புதியபுதிய பாட்டுக்களில் அமைக்க விரும். கிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி, அற்பு மான ஒளிச் சிறப்பும், பொருட் பெருமையும் உடை பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய் வேண்டும். தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனை படுத்திக்கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கு: யோசனை செய்து கொண்டிருந்தால்-உன்னை எப்படி பாடுவேன்? மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்வதி பயனில்லை. அவளும் உனது சரணையே நம்பி, என்னுடன் எப்போதும் வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிே கிடைக்கும் புகழில் பங்குபெற்று மேன்மையுற விரும் கிருள். இயன்றவரை உண்மையோடு தானிருக்கிருது அவளையும் நீ ஸ்ம்ரக்ஷணை செய்யவேண்டும்.