15
பாரதியாருடைய கட்டுரைகளிலும், கவிதைகளிலும் இந்த நகைச்சுவை மிக அழகாகப் பளிச்சிடுவதை உணர்ந்து என்றும் அனுபவிக்கலாம்.
நகைச்சுவை என்றால் சாதாரணமானது அல்ல; அவை என்றும் இன்பமளிக்கக் கூடியவை. பழித்து அறிவுறுத்த வேண்டும் என்று நினைத்தால் ஒரே அடியாகப் பழித்து விடுவார். நையாண்டி செய்வதென்றால் அதள பாதாளத்தில் ஒரே அடியாக அமிழ்த்து விடுவார்.
இத்தனைக்கும் அவர் சூதுவாது தெரியாதவர். கோபம் வந்துவிட்டால் இடி இடித்துவிடும். தப்பவே முடியாது. மறுகணம் அதை மறந்து விடுவார். மீண்டும் உற்சாகம் கொடுப்பார். எப்படியாவது தூங்கிக் கொண்டிருந்த தமிழகத்தைத் தட்டி எழுப்ப வேண்டும் என்று ஆசை கொள்கின்றார் கவிஞர்.
“நெஞ்சில் உரமுமின்றி” என்ற கிளிக் கண்ணியைப் பாருங்கள். பழித்து அறிவுறுத்துவதாக இக் கவிதை எழுதப்பட்டுள்ளது.
நடிப்புச் சுதேசிகள்
(பழித்தறி வுறுத்தல்)
கிளிக் கண்ணிகள்.
1. நெஞ்சில் உரமு மின்றி
நேர்மைத் திரமு மின்றி,
வஞ்சனை சொல்வாரடீ! — கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடீ!
2. கூட்டத்திற் கூடி நின்று
கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்திற் கொள்ளாரடீ! — கிளியே!
நாளில் மறப்பாரடீ!