18
17. பஞ்சத்தும் நோய்களிலும்
பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!—கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
18. தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா்!—கிளியே!
வந்தே மாதர மென்பார்.
காதல் என்றும் உள்ளது. அது மனிதனுக்கும் விலங்குகளுக்கும் அதனதன் இயல்புகளுக்கேற்ப அமைந்திருப்பது.
இங்கே குயிலுக்கும், குரங்குக்கும், மாட்டுக்கும் காதல் நடைபெறுகின்றது. அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், குரங்கு, மாடு இவைகளிடம் எதைக் கண்டு காதல் கொள்கிறேன் என்று குயில் சொல்லுவது அழியாத நகைச்சுவை யூட்டுவதாக இருக்கின்றது. கவிஞன் ஒரு காலையிலே மாஞ்சோலை தேடிச் செல்கின்றான். குயில் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கிறது. அதனாலே, காதல் கொண்ட கவிஞன் மறுநாளும் அதே நினைவாகக் குயிலைத் தேடித் திரிகின்றான். கவிஞனிடத்திலே காதல் பேசுகின்ற குயில், குரங்கினிடத்திலே அதே காதல் மொழி பேசுகின்றது. கவிஞன் சற்று நின்று நிதானித்து என்ன பேசுகிறதென்று கேட்க விரும்புகின்றார்.
குயில் காதல் வர்ணணை நகைச்சுவை கொப்பளிப்பதாக அழியா அழகுடன் அமைந்திருப்பதை பாரதியாருடைய இனிமையான கவிதை வரிகளிலேயே கேட்போம்:
“வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்