உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


குயிலும் குரங்கும் செய்யும் நாடகம் பார்த்தோம். மறுநாள் காட்சி மாறுகின்றது. குயில் குரங்கை மறந்து விட்டது. அதற்குப் பதிலாக மாட்டின்மேல் காதல் கொள்கின்றது. எதனால் காதல் கொண்டேன் என்பதையும் நகைச்சுவையோடு தெரிவிக்கின்றது! பாரதியார் வரிகளிலேயே அந்த மறக்கமுடியாத பாடலைக் கேட்போம்:

நந்தியே,
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!
காமனே! மாடாகக் காட்சி தரும் மூர்த்தியே!
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ?
மானிடருந் தம்முள் வலிமிருந்த மைந்தர் தமை
மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப் புகழ்வார்.
காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே!
நீளமுகமும், நிமிர்ந்திருக்குங் கொம்புகளும்!
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்!
மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்!
வானத் திடிபோல ‘மா’ வென் றுருமுவதும்,
ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல்
காலம் நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்
பார வடிவும் பயிலுமுடல் வலியுள்
தீர நடையும் சிறப்புமே இல்லாத
சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்.
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு.
மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம்,
சின்னக் குயிலின் சிறு குலத்திலே தோன்றி
என்ன பயன் பெற்றேன்? எனைப்போலோர் பாவியுண்டோ?
சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன் வயிற்றில்
போற்று மொளிமுத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ?