22
சுதந்திர வாழ்வு பெறாத பாரத மக்களின் அன்றைய நிலைமையை எப்படியெல்லாம் கேலி செய்கின்றார் பாருங்கள்! உண்மையில் பாரதியாருக்குக் கேலி செய்வது நோக்கமல்ல. இடித்துரைத்து ரோஷம் கொள்ளச்செய்ய வேண்டுமென்பதே அவருடைய ஆவல். சிப்பாய்களைக் கண்டால் பயம், துப்பாக்கி வைத்துக்கொண்டு சென்றால் அதைவிட பயம் என்றிருந்த நிலைமை இன்று மாறி விட்டது, இருந்தாலும் பழைய நிலைமையை எண்ணி வயிறு வெடிக்கச் சிரிக்கலாம். அந்த முறையிலே இக்கவிதை பெரிதும் வரவேற்கத் தகுந்ததாகும். பாரதியார் கவிதையையே நோக்குவோம். நெஞ்சு பொறுக்குதில்லையே, நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதியார் திருப்பித் திருப்பிச் சொல்லும்பொழுது நமது நெஞ்சமும் பொறுக்க முடியாத அளவுக்கு அவமானத்தால் வேதனை அடைகின்றது.
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை (நொண்டிச்சிந்து)
1. நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர் படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)
2. மந்திரவாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனி யங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்!