பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


23 தந்த பொருளைக் கொண்டே-ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்: அந்த அரசியலை-இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு) சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்: துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்: அப்பால், எவனே செல்வான்-அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்; எப்போதும் கைகட்டுவார்-இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், கொஞ்ச மோபிரி வினைகள்?-ஒரு கோடி என்ருல் அது பெரிதாமோ? ஐந்துதலைப் பாம்பென்பான்-அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால், நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு) சாத்திரங்கள் ஒன்றும் காணுர்-பொய்ச் சாத்திரப் பேய்கள்சொல்லும் வார்த்தைநம்பியே கோத்திரம் ஒன்ரு யிருந்தாலும்-ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்; தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்; ஆத்திரங் கொண்டே இவன்சைவன்-இவன் அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)