25
"கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெலாம் ஊரம்பலத் துரைப்பார்;
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்.
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
பாஞ்சாலி சபதத்திலே தருமரும் சகுனியும் சூதாடுகின்றனர். பொருள்களை ஒவ்வொன்றாக இழக்கிறான் தருமன். இறுதியில் நாட்டையே வைத்துச் சூதாடுகின்றனர்.
இந்த இடத்திலே பாரதியாருக்கு அடங்காத கோபம் வந்து விடுகின்றது. நாட்டை வைத்து இழப்பது என்ன நியாயம் என்று சீறுகின்றார் கவிஞர். ஆயிரம் நீதிகள் தருமன் உணர்ந்திருந்தாலும் தேசம் வைத்திழப்பதற்கு என்ன நியாயம் என்று அதட்டிக் கேட்கின்றார் பாரதியார். சிச்சீ சிறிய செய்கை செய்தான். அற்பத் தனமான செய்கை செய்துவிட்டான் என்று முழங்கு கின்றார். கோயில் பூசை செய்கின்றவன் சிலையையே விற்றிடலாமா? அதற்கு என்ன நியாயம்? நாட்டு மாந்தரெல்லாம் தம்மைப்போல் மனிதர்கள் என்று அவர் நினைத்தாரா? ஆட்டு மந்தை என்று நினைத்தாரா? என்று கேட்கிறார் கவிஞர்.