உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


இந்த இடத்திலே ஒன்று நினைவுக்கு வருகின்றது பண்டைக் காலத்திலெல்லாம் மன்னனே உயிரென்றும் மக்கள் உடலென்றும் எண்ணிவந்தனர். ஆனால் கம்பர் ஓர் அற்புதமான கற்பனையை வெளியிடுகின்றார். தமது இராமாயணத்திலே மன்னனே உடலென்றும், மக்களெல்லாம் உயிரென்றும் அவர் ஒரு புரட்சிகரமான சிந்தனையைத் தோற்றுவிக்கின்றார்.

அதேபோல அரசனுக்குரிய சில கடமைகள் உண்டென்றும், நாட்டைப் பாதுகாத்தலே அவன்கடைமை என்றும், தனது விருப்பம்போல் நாட்டை என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடாதென்றும், ஒரு புதிய சிந்தனையை எழுப்புகின்றார் நம் கவிஞர். அரசனுக்குரியதெல்லாம் நாட்டைச் சிறந்த முறையில் ஆட்சி புரிவதுதான். தன் விருப்பப்படி அதைத் தன் சொத்தாக எண்ணிவிடச் கூடாதென்றும் கீழ்க்கண்ட வரிகளிலே தெளிவாகக் கூறுகின்றார் பாரதியார். அந்த அழகிய வரிகளை இனி நோக்குவோம்:

கோயிற் பூசை செய்வோர் - சிலையைக் கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் - வீட்டை வைத்திழத்தல் போலும்
ஆயிரங்களான - நீதி யவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் - சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்
'நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நரர்களென்று கருதா!
ஆட்டு மந்தை யாமென்' றுலகை, அரசரெண்ணிவிட்டார்
காடடு முண்மை நூல்கள் பலதாங் காட்டினார்க ளேனும்
நாட்டு ராஜநீதி - மனிதர் நன்கு செய்யவில்லை.
ஓரஞ் செய்திடாமே - தருமத்துறுதி கொன் றிடாமே,