பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 காட்டிலும் வாய்ப்பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலா மென்பான். மற்ருெருவன் மணலைக் கயிருகத் திரிக்கலா மென்பான். ஒருவன் நாம் இந்த ரேட்டில்-இந்தவிதமாகவே-வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறு மாதத்தில் காற்ருய்ப் போய் வி டு ம்' என்பான். முற்ருெருவன், சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக் கிருர். ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்றுகிறது என்பான். தவளை யுருவங்கொண்ட மூன்ரு மொருவன்:- ஆறு மாதமென்று சொல்லடா என்று திரு த்திக் கொடுப்பான். u...... ஆழ்வார் எங்களிலே முக்கியஸ்தர். அவர் இதை எல்லாம் கேட்டுப் பரமானந்தமடைந்து கொண் டிருப்பார். ஆல்ை, ஒரு தேவதை அவரிடம் வந்து, உங்களுக்கு நான் ஸ்வராஜ்யம் நாளை ஸஅர்யோதயத்திற்கு முன்பு ஸம்பாதித்துக் கொடுக்கிறேன். நீ உன் வீட்டி லிருந்து அதற்காக ஒரு வராகன் எடுத்துக்கொண்டு வா" என்று சொல்லுமாயின், அந்த ஆழ்வார், தேவதையே, உனக்கு வந்தனம் செய்கிறேன். ஓம் சத்தியை நம, ஒம் பராயை நம; இத்யாதி; அம்பிகே, இந்த உபகாரத்திற்கு நாங்கள் உனக்கு எவ்வாறு நன்றி செலுத்தப் போகிருேம்? எங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் உன்னுடையதே யாகும். ஆனால், ஒரு வராகன் கேட்ட விஷயத்தைப்பற்றி நான் ஒரு வார்த்தை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதைக் கேள். நீ சொல்லுகிற காரியமோ பொதுக்காரியம். அதற்குப் பொது ஜனங்கள் பணம் சேர்த்துக் கொடுப்பதே பொருத்தமுடையதாகும். நான் ஒருவன் மட்டிலும் கையிலிருந்து பணம் செலவிடுதல் பொருத்தமன்று - இவ்விஷயத்தைப் பற்றி நாங்கள்