35
இரண்டுண்டு வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம் என்ற வகையைச் சார்ந்தது. அதுவே. கடுங்கோபம் வந்து விட்டால் கவிஞருடைய சொல்லம்பினால் தாக்கப்படுவதுண்டு. தமிழ் என்ற கட்டுரையில் வந்த கடுங்கோபம் அத்தன்மை வாய்ந்தது. தமிழை இழிவு செய்துவிட்டார் என்பதனால் விளைந்த கோபம் அது. ஆனால் எப்பொழுதுமே இந்தக் கடுங்கோபம் பாரதியாருக்கு வருவதில்லை. வாழைப் பழத்திலே ஊசி ஏற்றினாற்போல மெதுவாக வரும் வஞ்சப் புகழ்ச்சியும் இவற்றில் பலவகைகளில் அடங்கும். இதற்கு நேரான ஆங்கில மொழிபெயர்ப்பு சொல்வது கஷ்டம். வேண்டுமானால் மென்மையான வஞ்சப்புகழ்ச்சி என்பதை (Gentle irony) என்று சொல்லலாம்.
இவ்வாறு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் பாரதியார் கையாண்டிருக்கிறார். இதோ ஓர் எடுத்துக் காட்டு. தமிழ்நாட்டின் விழிப்பு என்ற கட்டுரையிலே அவர் கூறுகின்றார். "கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. 'ராம ராவண யுத்தத்துக்கு ராம ராவண யுத்தமே நிகர்' என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்ப கர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடு குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச்சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ராவணன் கட்டளையிட்டானாம். மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குரட்டை நிற்கவேயில்லை.
மேற்படி கும்பகர்ணனைப் போலவே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும்