பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 காது கேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு, அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹாபாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத்துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானுடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிருர்கள். ஆனால், ஹிந்து சேதம் அப்படி...... யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேசவந்தோம். தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று!" பாரதியார் தம்மைத்தாமே கேலி பண்ணிக் கொள்ளு வதிலும் திறமைவாய்ந்தவர். "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே “ஜெயமுண்டு பயமில்லை மனமே" "பயமெனும் பேய்தனை அடித்தோம்' என்று பாடியவரல்லவா பாரதியார்! பேய்க்கூட்டம் என்ற கதையிலே இவர் தம்மையே கேலி செய்து கொள்வதைப் பார்ப்போம். 'வாப்பா காளிதாஸா, பயப்படாதே. தரையின் மேல் உட்கார்ந்து கொள். மனதைக் கட்டு. மூச்சை நேராக்கு. ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. நீ செய்த நூல்கள் சில நாம் பார்த்திருக்கிருேம். கடலெதிர்த்து வந்தால் கலங்க மாட்டோம் தலைமேல் இடி விழுந்தால் தளர் மாட்டோம்; எங்கும் அஞ்சோம்; யார்க்குமஞ்சோம்: எதற்குமஞ்சோம்; எப்போதும் அஞ்சோம் என்று நீ பாடினதை நான் நேற்று ஒரு புஸ்க தத்தில் பார்த்தேன். நீ ஆண்மையான அனுபவத்தைச் சொன்னயா, அல்லது வெறுங் கற்பனைதான என்பதை அறியும்பொருட்டாச்