பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பையன் : "எங்கப்பா சாஸ்திரியார். அவராலே வண்டியை நேர்ப்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கிக்கொண்டு வருவார். வேறே ஒரு இழவுந் தெரியாது" என்று விம்மி விம்மி யழுதான். சிப்பாய் சிரித்துக் கொண்டே போய் விட்டான். பாரதியார் நம் நாட்டிலே மலிந்து மலிந்து கிடக்கும் மூட பக்தியை மிகவும் கண்டிக்கிருர். இதில் இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்ருல், இங்கிலீஷ் படிப்புப் படித்து விட்டால் மூட நம்பிக்கைகள் தாமாகவே மறைந்து போகும் என்பதாகும். பாரதியார் இங்கிலீஷ் படிப்புக்கு அதிகம் மதிப்பே கொடுக்கவில்லை. செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது, தீதெனக்குப் பல்லாயிரம் நேர்ந்தன, நலமோர் எட்டுனையும் கண்டிலேன்-இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்’ என்று பாடியவரல்லவா பாரதியார்! உண்மையில் ஆங்கிலப் படிப்பு படித்தவர் களிடம்தான் மூடபக்தி அதினம் இருக்கின்றது என்று மூடபக்தி என்ற கட்டுரையில் விளக்குகிருர், "நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதல்ை நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லே யில்லை. இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நக்ஷத்திரம், லக்னம் முதலியன பார்த்தல். கூடிவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றல், அதற்கு கூட நம்மவர் மாலப் பாருத்தம், பகடிப் பொருதத,ப, திதிப பொருத்தம பாட் பொருத்தம், நrத்திரப் பெருததம் இத்தனையும் பார்த