உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


படிப்புக் கற்றுக் கொடுத்தால் இவை அழிந்து போய்விடும் என்றும், இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் ஒருவாறு அது மெய்யென்றே நம்புகிறேன். ஆனால் அதற்குத் தற்காலத்தில் நமது தேசத்துப் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு சுத்தமாகப் பிரயோஜன மில்லையென்று ஸ்பஷ்டமாக விளங்குகிறது. சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூட பக்திகளை எல்லாம் விட்டு விலகி நிற்கிறார்களா? இல்லை. நமது தேசத்தில் முப்பத்து மூன்று கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுக்கும் ஒருவர் மிச்சமில்லாமல் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுத்த பின்புதான் மேற்கூறிய ஸாமான்ய மூடபக்திகள் விலக வேண்டுமென்பது அவசியமில்லை. ஏற்கெனவே, இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேறியவர்கள் இந்த விஷயத்தில் தமது மனச்சாக்ஷிப்படி யோக்யமாக நடந்து வந்திருப்பார்களானால், மற்றவர்களிலும் பெரும்பாலர் நடை திருந்தியிருப்பார்கள். இன்னும் எத்தனையோ விஷயங்களில் நம்மவர் இங்கிலீஷ் படித்தவரின் நடையைப் பின்பற்றித் தங்கள் புராதன வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கக் காண்கிறோம். அது போலவே இந்த விஷயத்திலும் நடந்திருக்கும்.

ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்குப் போய் தேறினவர்களிடம் மனச்சாக்ஷிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விலாசத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள், நிஜ சாஸ்