உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


இவ்விதமான மூட பக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்று சிலர் முறையிடுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நகைக்கும்படியான செய்கைகள் செய்ய வேண்டு மென்று ஸ்திரீகள் பலனின்றிப் பிதற்றுமிடத்தே, அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலுந் தவறு. மேலும் அது உண்மையான காரணமன்று. போலிக் காரணம். நம்மவர் இத்தகைய ஸாதாரண மூட பக்திகளை விட்டு விலகத் துணியாமலிருப்பதின் உண்மையான காரணம் வைதிகரும் பாமரரும் நம்மை ஒரு வேளை பந்தி போஜனத்துக்கு அழைக்காமல் விலக்கி விடுவார்கள் என்பதுதான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து ஹிந்துக்கள் கணக்கில்லாத மூடபக்திகளைக் கைவிலங்குகளாகவும், கால் விலங்குகளாகவும், கழுத்து விலங்குகளாகவும் பூட்டிக் கொண்டு தத்தளிப்பதின் தலைமைக் காரணம் பந்தி போஜனத்தைப் பற்றிய பயந்தான். அதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு ஸ்திரீகளின்மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள் மற்றும் எத்தனையோ வியவகாரங்களில் தம்மினத்து மாதரை விலையாமைகள் போலவும், விலங்குகள் போலவும் நடத்தும் விஷயம் நாம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் நஷ்டமும் கால நஷ்டமும் அந்தக் காரணத்தின் இகழ்ச்சியும் உலகத்து அறிஞரின் நகை பாடலும் ஸத்ய தெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர்! பந்திபோஜன ஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டீர்! தைர்யமாக நீங்கள் உண்மையென்று உணர்ந்தபடி நடவுங்கள். பந்தி போஜனம் சிறிது காலத்துக்குத்தான் உங்களுக்குக் கிடைக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத் தொகை அதிகமாகும். ஸத்ய பலம்