45
நேற்று மாலை விக்டோரியா நகர மண்டபத்தில், லாலா லஜபதிராய் தீபாந்தரத்திற்கேற்றி அனுப்பப்பட்ட விஷயமாக, மஹாஜன சபையாரால் கூட்டப்பெற்ற பெருங் கூட்டத்தில் நடந்த செய்திகளை நேரே வந்து கண்டவர்களெல்லாம் இனி மயிலாப்பூர் வக்கீல்கள் ஜனத் தலைவர்களென்று மூச்சுவிடக்கூட இடமில்லை யென்பதை நன்றாக அறிந்திருப்பார்கள்.
நேற்று மாலை மீட்டிங்கிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின் வருவனவாகும் :—
1. இதுவரை பழைய கட்சிக்காரருக்கு முக்கிய தர்மமாக இருந்த விண்ணப்ப முறைமையை நேற்று அவர்கள் நாமாகவே பேதமையாகுமென்று நிறுத்திவிட்டனர்.
2. அப்படி அவர்கள் விண்ணப்பம் செய்ய விரும்பாத போதிலும் வெறுமே இந்தியா மந்திரிக்கு மீட்டிங்கைப் பற்றித் தகவல் கொடுக்க வேண்டுமென்று மிஸ்டர் பி. ஆர் அந்தரய்யர் சொன்னதைக்கூட ஜனங்கள் அங்கீகரிக்காமல் கோபமடைந்தார்கள்.
3. மயிலாப்பூர் வக்கீல்கள் தாம் ஜனத்தலைவர்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்தது பொய்க் கனவென்பதை அறிந்து கொண்டார்கள்.
4. ஸ்ர்க்காரிலே ஸ்ர் என்றும் உர் என்றும் பட்டம் பெற்றுத் திரிந்தர்களையெல்லாம் ஜனங்கள் மதிப்புடன் நடத்திய காலம் போய், இப்போது அவர்களைப் பகிரங்க சதானங்களிலே பேசவொட்டாத நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
5. இங்கிலீஷிலே பேசக்கூடாது. தமிழ் நாட்டிலே இனத்தலைவர்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு