பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ї \r அவற்றைத் துரன் அவர்களே பாடிக் காட்டியிருக்கலாம். ஆனால், தனக்கு பூர்ணமாகத் தெரியாத எதிலும் காலடி வைக்காத குணத்தால் அவர் வித்வானை விட்டுப் பாடச் சொன்னர். இந்த அடக்கம் அநேகருக்குக் கிடையாது. தங்கள் சாகித்யங்களைத் தாங்களே பாடிக்காட்டி என்னை இம்சை செய்தவர்கள் உண்டு. ஆனல் கவிஞரான தூரன் அவர்கள் தமது எல்லேயைவிட்டுத் தாண்டியதில்லை. அந்த எல்லை பெரிது; ஆழமுடையது. அத்தகைய சாகித்யங்கள் தமிழுக்குப் பெரிதும் மணமூட்டுகின்றன. சங்கீதத்தில் கானரஸம், சாகித்யரஸம் என இரண்டு உண்டு. அவை இரண்டில் சாகித்யத்தைப் பெரிதாக சமஸ்கிருத சாடு சுலோகம் ஒன்று சொல்லுகிறது. "சிசுர் வேத்தி பசுர் வேத்தி வேத்தி கானரலம் பணி ஸாகித்ய ரஸமாதுர்யம் ஸர்வக்ஞோ வேத்திவாகவா" 'கானரஸத்தைச் சிறு குழவியறியும், விலங்கு அறியும், பாம்பறியும். ஆனல் ஸாகித்ய ரஸத்தின் மதுரத்தை ஸர்வக்ஞளுன ஈசுவரனும் அறிவானே மாட்டானே' என்று சாகித்யத்தின் மேன்மையை மேற்படி சுலோகம் சொல்கிறது. சிறந்த சாகித்யமும் கவிதைதான். அதை இயற்றுபவர் கவிதான், அப்பேர்ப்பட்ட கவிகளில் சிறந்த ஒருவரான தூரன் அவர்கள் மஹாகவி பாரதியாரின் கவிதைகளின் உட்பொருள் களை விளக்க வந்தது மிகவும் பொருத்தம். இந்த நூலில் பெரியசாமித் தூரன் அவர்கள் பாரதியாரின் கவிதைகளில் மட்டுமின்றி உரைநடைக் காப்பியத்திலுள்ள நகைச்சுவையையும் நையாண்டியையும் மிகத் தெளிவாக எடுத்து விளக்குகிருர். பல இடங்களில் அவசியத்தை முன்னிட்டு தமது விளக்கத்துடன் பாரதியாரின் கவிதைகளை யும், உரைநடைப் பகுதிகளையும் நீளநீளமாக அப்படியே போட்டு பாரதியாரின் நகைச்சுவையையும் நையாண்டியையும் நம்மை அனுபவிக்கச் செய்கிருர். உதாரணமாக "நடிப்புச்