பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


虏2 ஐர்லாந்தியர் ஐர்லாந்திலும், லண்டன் மான் செஸ்டர் முதலிய நகரங்களிலும் என்ன கார்யங்கள் செய்து வந்தன ரென்பதும், அதனல் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலி யோருக்கு நேர்ந்த அலெளகர்யங்கள் எவையென்பதும் நேயர்களுக்குத் தெரிந்த சங்கதிகளேயாம். இத்தனை பலாத்காரங்களைக் கருதி ஸ்வராஜ்யம் கொடுத்துத் தொலைப்போம் எனிலோ, வட ஐர்லாந்து மந்திரியாகச் சில தினங்களின் முன்னே முளைத்திருக்கும் ஸ்ர் ஜேம்ஸ் க்ரேக் ஏற்கெனவே போர்க் கொடியைத் தூக்கி விட்டார். அல்ஸ்டர் மாகாணத்துக்குத் தனிப் பார்லிமெண்ட் சாசுவதமாக இருக்குமெனில், பிறகு ஐரிஷ்ஸ்வராஜ்யம் என்பதற்கு அர்த்தமே கிடையாது. ஜர்லாந்தை இரண்டாக வெட்டிப் பிறகு ஸ்வராஜ்யம் கொடுப்பதென்ருல், என்ன செய்கை அது! அஃதொருவனை இரண்டாக வெட்டிக் கொன்ற பின்னர் அவனுக்கு மணம் புரிவிப்பதாகக் கூறுதல் போலும். எனடே, அல்ஸ்டர் என்ருெரு பதார்த்தம் இருப்பதன் உண்மையை நன்குணர்ந்த ரீமான் தெவலேரா, தாம் தமது குடியரசுக் கொள்கையை விட்டு "ஸ்மட்ஸ் ஸ்வராஜ்யத்தை அங்கீகரிக்க ஆயத்தமாக இருப்பதாகவும், ஆனல் அல்ஸ்டர் தனது தனிப் பார்லி மெண்டை விட்டுவிட வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இங்ங்ணமிருக்க, முன்பு யூனியனிஸ்ட் தலைவராக இருந்து இங்கிலீஷ் கவர்மென்டினிடமுள்ள அளவிறந்த பக்தியால், அதனை எதிர்த்துப் போர்செய்யப் படைகள் தயார் செய்த வராகிய ஸ்ர் எட்வர்ட் கார்ஸனுடைய பட்டத்தில் இப்போதிருக்கும் அல்ஸ்டர் ப்ரதம மந்திரியான ஸர் ஜேம்ஸ் க்ரேக் லண்டன் சமாதான ஸங்கத்திற்குத் தம்மை ப்ரிடிஷ் கவர்மெண்டார் அழைத்திருப்பதைக் குறித்துப்