பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


荔 பேசிய உதாளின மொழிகளை ராய்ட்டர் தந்திகளி னிடையே காணலாம். இங்கிலாந்திலும் லார்ட் டெர்பி முதலியவர்கள் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜைக் கடலில் கவிழ்த்து விடுவதற் குரிய யோசனைகள் இப்போது தீவிரமாகப் புரிவதன் காரணம் ஐர்லாந்துக்கு அவர் ஸ்வராஜ்யங் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தாலேயன்றிப் பிறிதில்லை. கான்ஸர்வடிவ் ககதியார் கைவிட்டால் பிறகு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கு பஸிபிக் சமுத்திரந்தான் கதி. இங்ங்னம் ஐர்லாந்து விஷயத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் இருதலைக் கொள்ளி எறும்புபோல் இடர்ப்படுதல் ஒருபுறமிருக்க, இந்த சமயத்தில் இந்தியராகிய நாமும் அவரிடம் ஒரு செய்தியை மிக நன்கு வற்புறுத்திக் கூற விரும்புகிருேம். அதாவது, ஐர்லாந்தைச் சென்ற பல நூற்ருண்டுகளாக மீட்டும் மீட்டும் போரில் அடக்கி, அதன் விடுதலை வேட்கையை மறுத்து வந்தீர்கள். ஐர்லாந்து மிகச் சிறிய நாடு. உண்மையில், இப்போதுகூட இங்கிலாந்தினலே ஐர்லாந்தைப் போரில் மடக்கிவிட முடியும். அப்படியிருந்தும், உலக முழுமையிலும் எழுச்சி பெற் றிருப்பதாகிய, பெரிதோர் தர்மக்கிளர்ச்சியை முன்னிட்டு, ஜர்லாந்துக்குக்கூட இனி ஸ்வராஜ்யமில்லை என்று மறுத்தல் இங்கிலாந்துக்கு ஸாத்யப் படாதென்று தீர்ந்து போய் விட்டது. அப்படியிருக்க, 5000 வருஷங்களுக்கு முன்னே வேதாந்தப் பயிற்சி செய்தது; முப்பது கோடி ஜனங் களுடையது; இன்றைக்கும் ஜகதீச சந்திரர் முதலியவர் களின் மூலமாக உலகத்தாருக்கு நாகரிகப் பாதையிலே வழி அாட்டுவது; பூமண்டல சரித்திரத்திலே வீர்ய முதலிய ராஜ