பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 குணங்களில் நிகரற்றதாகிய இந்தியாவுக்கு விடுதலை எப்போது தரப்போகிறீர்கள்?" பாரதியார் அரசியல் கட்டுரைகளில் எவ்வாறு நையாண்டி செய்கிருர் என்று எடுத்துக்காட்டுகள் சில வற்றின் வாயிலாகப் பார்த்தோம். இவற்றை முற்றிலும் அறிந்துகொள்ள விருப்ப முடையவர்கள் 'பாரதி தமிழ்' என்ற எனது தொகுப்பு நூலிலும், பாரதி தரிசனம் என்ற இரண்டு தொகுதிகளாக வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்திலும் படித்து இன்புறலாம். அரசியல் கட்டுரைகளிலும் எவ்வாறு தமது பேைைவத் திறம்படக் கையாள்கிருர் என்பதை இம் மூன்று நூல்கள் நன்கு தெரியப்படுத்தும். ஆனல் பாரதியார் அரசியல் அல்லாத கட்டுரை களிலும் எவ்வாறுநகைச்சுவையைப் புகுத்துகிருர் என்பதை அவருடைய மேதைக்கு ஒர் இலக்கணமாகக் காட்டலாம். உல்லாஸ் சபை, பொழுதுபோக்கு என்பன இவற்றிற்குச் சிறந்த எடுத்துக் காட்டு. மேலும் இவை, பாரதியார் இயல்பாகவே நகைச்சுவை மிக்கவர் என்பதற்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளன. உல்லாஸ் சபை 29 Lôffff # 1916 வேதபுரம் உல்லாச சபையில் நடந்த செய்தி. சபைக்கு வந்திருந்த பேர் : - (1) ஜிந்தாமியான் ஸேட், (2) வெங்கட்டராவ், (3) குண்டு ராயர், (4) குமாரசாமி வாத்தியார், (5) எலிக் குஞ்சு செட்டியார், (6) காளிதாஸன், (7) மணவாளன் செட்டியார்.