பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


l கதேசிகள் (பக்கம் 15), பாரத ஜனங்களின் தற்கால நிலைமை (பக்கம் 22). உல்லாஸ்சபை (பக்கம் 54) இவற்றை கவனிக் கவும். இந்த நூலில் நாம் சிறந்த கருத்துக்களை ரசிக்கிருேம். எலிக்குஞ்சு செட்டியார், ஜிங்காமியா சேட், குண்டுராயர் போன்ற விநோதப் பிருகிருதிகளையும் சந்திக்கிருேம். இந்த நூலில் நையாண்டி, நகைச்சுவை, இவை மட்டு மல்லாமல் பாரதியாரின் சிறந்த சில கோட்பாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிருர் ஆசிரியர். 'ஸ்திரீகள் பதிவிரதை களாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிரு.ர்கள். அதிலே கஷ்டம் என்னவென்ருல், ஆண்பிள்ளைகள் யோக்கியர் கள் இல்ல்ை” என்று பாரதி திட்டவட்டமாக அறிவிக்கும் கட்டுரைப்பகுதிகளை எடுத்துக் காட்டுகிருர் நூலாசிரியர். பெரியசாமித் தூரன் அவர்கள் நூலைப்பற்றி இன்னும் எத்தனையோ எழுதலாம். அப்படி எழுதினுல் இந்த முன்னுரை தனி நூலாகும் என்ற அச்சத்தால் இதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நையாண்டிக்கு ஆங்கிலத்தில் இரு சொற்கள் உண்டு. 96irs), Satire, Qār?(69;ir DJ Irony. Irony is the humour of Satire என்று Irony-க்கு ஆங்கிலத்தில் பொருள் கூறப்படு கிறது. இந்த நூலில் இரண்டுமே கலந்திருப்பதால் நூலின் சுவை அதிகமாயிருக்கிறது. பெரியசாமித் தூரன் என்ற வண்டு பாரதியாகிய மலர்களி லிருந்து தேனைத்திரட்டி இக்கட்டுரைத் தொகுதியாகத் தந்திருக்கிறது. அந்த இன்பத்தேன் காதில் மட்டுமின்றி மனத்துள்ளும் பாயும் வகையில் அனுபவிக்க வேண்டியது தமிழர் கடமை. தமிழில் நாவல்கள், சிறு கதைகள் நிரம்ப இருக்கின்றன. கட்டுரைகள் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்கிறது பெரியசாமித் தூரன் அவர்களின் 'பாரதியின் நகைச்சுவையும்