பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 எலிக்குஞ்சு செட்டியார் : நாணயக் குறைவு யாருக்குக் காணும் நாணயக் குறைவு? சாஹப். உம்முடை, மஹம்மதிய குணங்களை நம்மிடம் காட்ட வேண்டாம் தெரியுமா? ஜிந்தாமியான் சேட் : செட்டியாரே, அதிக வார் த்தை பேசிவிட்டீர். ஒரு தரம் பொறுத்தேன். ஹோஷ்யா! (ஜாக்ரதை!) எலிக்குஞ்சு செட்டியர் : என்ன ஸாஹப், தாடிம்ை உருவுகிறீரே, அடித்துப் போடுவீரோ? ஜிந்தாமியான் சேட் ஹோஷ்யார்! எலிக்குஞ்சு செட்டியார் : நம்முடைய கடையிலே உம்மைப் போலவே நாலு முரடர்களை வேலைக்கு வைத் திருக்கிறேன். ஞாபகமிருக்கட்டும். ஜிந்தாமியான் சேட் : ஹோஷ்யார்! ஹோஷ்யார்! எலிக்குஞ்சு செட்டியார் : என்ன காணும், வெகு பயமுறுத்துகிறீரே! யாரென்று நினைத்தீர் நம்மை? (என்று சொல்லிக் கொண்டு எலிக்குஞ்சு செட்டியார் எழுந்து நின்று கையை ஓங்கினர்.) s சபையார் கலீரென்று சிரித்தார்கள். ஏனெனில் எலிக்குஞ்சு செட்டியார் 4 அடி உயரம். ஜிந்தாமியான் ஸேட் 6 அடி உயரம். செட்டியார் 1; அடி அகலம். ஸேப் 3; அடி அகலம். செட்டியாருக்கு வயது 55. லேட்டுக்கு வயது 33. இந்தச் சமயத்தில் காளிதாஸன் எழுந்து, "೭೧][೧೦ಕ್ಕೆ திற்கு ஒரு அளவிருக்கவேணும். வரை கடந்து போக் லாகாது. செட்டியாரே உட்காரும்....என்னைச் சபுை யிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரேரணை செய்தீர் முகாந்தரங்கள் சொல்லும்" என்ருர்,