பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 Ս நெருப்பா? என்று செட்டியார் உடனே எழுந்து ஒடினர். சபையைக் கலைத்துவிட்டு நாங்களெல்லோரும் செட்டியாருக்கு உதவி செய்யும் பொருட்டு அவர் விட்டுக்குப் போனேம். அங்கே போய்ப்பார்க்கும் போது. அது மற்ருெரு நாட் கதை. இன்று கதை இத்துடன் முடிகிறது. பொழுது போக்கு 28 மார்ச்சு 1917 (காளிதாஸ்னுக்கும் ஸ்ந்தோஷராயருக்கும் நடந்த சம்பாஷணை) காளிதாஸன் எழுதியது. ஸந்தோஷராயர் : காளிதாஸ்ரே, பத்திரிகைகளில் ஏதேனும் இன்று புது விசேஷங்களுண்டா? காளிதாஸன் : ஒன்றுமில்லை. ஸந் : ருஷியாவில் ராஜ்யம் புரண்டு போனதாகவும், இரண்டே சில்லரை ஜார் ராஜினமாக் கொடுத்ததாகவும் போட்டிருந்ததே; அதற்கப்பால் என்னுயிற்று? . காளி : இரண்டே சில்லரை ஜார் என்கிறிரே அதென்ன? ஸ்ந் : பழைய ஜார் நிக்கொலஸ் ஒன்று; அவருடைய ரகஸ்யப் பிள்ளைதான் சில்லரை: ஆக ஒன்றே சில்லரை. பின்பு சக்கரவர்த்தியின் தம்பியாகிய மைக்கேல்; ஆக இரண்டே சில்லரை. காளி : சரிதான். ஸ்ந் : ருஷியாவில் நிரங்குசமாகப் பத்திரிகைச் சுதந்திரமில்லாமலும், பேச்சுச் சுதந்திரமில்லாமலும்