பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பேசியபோதிலும் மனதுக்குள் தெய்வபக்தியுடையவர், மனுஷ்ய ஜாதியின் முதுகின்மேலே பல்லாயிர வருஷங் களாகச் சுமந்து போயிருக்கும் அநீதியாகிய மலை சிதறிப் போகவேண்டுமென்பதே அவருடைய கருத்து. வேடிக்கைப் பெயர்கள் பாரதியார்-வேடிக்கையான பெயர் வைப்பதிலே அவருக்கிணை அவர்தான். எலிக்குஞ்சு செட்டியார், விளக்கெண்ணெய் செட்டியார், வெல்லச்சுசெட்டியார், இடிப் பள்ளிக்கூடம் என்று இப்படி வேடிக்கையாகவும் பொருத்தமாகவும் பெயர் வைப்பார். இந்த நகைச்சுவை இல்லாவிட்டால், பாரதியாருக்கு வறுமைத்துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் சக்தி வரவே வராது. எந்த ஒரு சம்பவத்தைக் கண்டாலும் அதில் நகைச்சுவையைக் காண்பது அவருக்கு இயல்பாக அமைந்துள்ளது. பாரதியார் வீட்டில் ஒரு சமயம் உணவுக்கு வேண்டிய அரிசியை, கல் பொருக்கி வைத்திருந்தார்களாம். தமது மனைவியாகிய திருமதி செல்லம்மா அவர்கள் ஏதோ வேலையாகப் போயிருந்தார்கள். அங்கே சிட்டுக்குருவி களும் காக்கைகளும் பறந்து வந்தன. உடனே அவர் அந்த அரிசியெல்லாம் பறவைகளுக்கு உணவாகப் போட்டு விட்டு ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தாராம். திருமதி செல்லம்மா அவர்கள் திரும்பிவந்து பார்க்கும் பொழுது அரிசியெல்லாம் காலியாக இருந்தது. 'ஐய்யய்யோ! வெகுநேரம் கல் பொருக்கிய அரிசியை இப்படி இறைத்து விட்டீர்களே. இனி மறுபடியும் கல் பொறுக்க வேண்டும். குழந்தைக்கு வயிறு பசிக்கும்" என்ருராம்.