பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لرز لم س. செல்லம்மா இத்தக் குருவிகள் என்ன ஆன தமாக ருக்கின்றன: அவற்றைப் பார்த்து ரசிக்காமல் 'ருத்தப் படுகிருயே” என்ருராம். இவ்வாறு வறுமையிலும் இன்பம் காண்பவர் பாரதியார். இவர் இடிப்பள்ளிக்கூடம் என்ற மாதர் பகுதியில் நகைச்சுவையோடும் அதே வேளையில் பெண் களுக்குரிய பல முன்னேற்றக் கருத்துக்களையும் மிக அழகழகாகச் சொல்லியிருக்கிறர். அவர் என்ன சொல்கிரு ரென்று கீழே வரும் மிகுந்த சுவையான கட்டுரையில் கவனிப்போம். 1917-ஆம் ஆண்டு ஜூன்மாதம் 12ஆம் தேதி இக் கட்டுரைகள் வெளியால் குெ க்ன்ெறன. பெண்கள் முன்னேற்றத்தைக் கருதாத அந் நாளிலேகூட எவ்வளவு துணிச்சலோடும் முன்னேற்றக் கருத்துக் கொண்டும் அவை விளங்குகின்றன. மாதர் வேதபுரத்தில் தர்மவீதியில் வாத்தியார் பிரமராய அய்யர் என்றுெரு பிராமணர் இருக்கிரு.ர். இவர் சாக்த மதத்தைச் சேர்ந்தவர். சக்தி பூஜை' பண்ணுவோரில் சிலர் மதுமாம்ஸ் போஜனம் செய்கிருர்கள். இந்த வாத்தியார் அப்படியில்லை. இவர் சுத்த சைவம்." அதாவது ஆட்டுக்குட்டியை மாம்ஸ்ம் சின்னும்படி செய் தாலும் செய்யலாம்; இந்த வாத்தியாரை மாம்ஸம் தின்னும்படி செய்ய முடியாது. இவர் இங்கிலீஷ் ப்ரெஞ்சு என்ற இரண்டு பாஷைகளிலும் நல்ல பாண்டித்ய முடையவர். கொஞ்சம் ஸ்ம்ஸ்கிருதமும் தெரியும். பகவத் கீதை, வால்மீகி ராமாயணம், குமாரஸம்பவம் மூன்று நூலும் படித்திருக்கிரு.ர். வேதாந்த விசாரணையிலே நல்ல