பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


{ና8 டிருந்தது. கேட்டுக் கொண்டிருந்தவர்களின் 'ஜாப்தா பின்வருமாறு : (1) வீராசாமி நாயக்கர். (இந்த நாயக்கர் ஆனைக் குட்டியைப் போலிருப்பார்: சர்க்கார் உத்தியோகம்: முப் பத்து மூன்று வயது; அதற்குள் சரியான வழுக்கை: நல்ல வ்யவஹார ஞானமுடையவர். வாய்பேசுவது கிடையாது, கோபம் வரும்போது கொஞ்சம் பொடியெடுத்து மூக்கில் போட்டுக் கொள்வார்). (2) கொங்கண பட்டர். (இவர் பெருமாள் கோயில் பட்டர், ஏழரையடி உயரம்; இவரை யார் வேண்டுமான லும் வையலாம்! வேஷ்டியைப் பிடித்திழுக்கலாம். மேற்படி வீராசாமி நாயக்கர் இவருடைய தலையில் கால்மணி நேரத் திற் கொருதரம் குட்டுவார். இவருக்குக் கோபம் வராது. இவருடைய ஜாதகத்திலே கோபத்துக்குரிய கிரகம் சேர வில்லையென்று கேள்வி.) (3) நாராயண செட்டியார். (பணக்காரர். குள்ளம்) வட்டிக்குக் கொடுக்கல் வாங்கல், இடிப்பள்ளிக்கூடம்இந்த இரண்டு தொழிலையுந் தவிர, மூன்ருவது கார்யத்தை இவர் கவனிப்பதே கிடையாது. வாரத்துக்கொரு முறை வெள்ளிக்கிழமையன்று பி ள் 2ள யார் கோவிலுக்குப் போவார். மற்றப்படி வீட்டைவிட்டு வெளியேறமாட்டார். இவரை அந்தப்புரச் செட்டியாரென்றும் சொல்லுவார்கள். (4) குருசாமி பாகவதர். (ஸங்கீத வித்வான்; குழந்தை களுக்குப் பாட்டும் வாத்தியமும் சொல்லிக் கொடுப்பார். சாரீரம் கட்டை.) மேற்படி சபையில் நானும் போய்ச் சேர்ந்தேன். பிரமராய வாத்தியாருக்கு என்னைக் கண்டவுடன் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டது.