பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


69 "வாருங்கள், வாருங்கள், உங்களுக்கு ரஸ்ப்படக்கூடிய விஷயந்தான் பேசிக் கொண்டிருக்கிருேம்" என்ருர். 'அதாவது என்ன விஷயம்?" என்று கேட்டேன். "ஸ்திரீயுடைய பேச்சு' என்ருர். "ஸ்திரீகளைப் பற்றின. பேச்சா? சரிதான், மேலே உபந் யாஸம் நடக்கட்டும்" என்றேன். வாத்தியார் கர்ஜனையைத் தொடங்குகிருர் : "நான் சொன்ன விஷயத்தைச் சுருக்கமாக சக்தி தாஸருக்கு மறுமுறை சொல்லிக் காட்டிவிட்டு மேலே சொன்னல்தான் அவருக்குத் தொடர்ச்சி தெரியும்' என்று சொல்லி பூர்வ கதையை யெடுத்தார். அந்த நிமிஷத்தில் வீராசாமி நாயக்கர் ஒரு தரம் பொடி, போட்டுக்கொண்டு கொங்கண பட்டர் தலையில் ஒரு குட்டுக் குட்டினர். "சில்லரை விளையாட்டு வேண்டாம். வாத்தியார் பிரசங்கம் நடக்கட்டும்' என்றேன். வாத்தியார் கர்ஜனை செய்யலானர்.

இந்தியாவின் ஆண் பிள்ளைகளுக்குகூட வாக்குச் சீட்டுக் கி ைட யா து. அதாவது ஜனங்களுடைய இஷ்டப்படி ஆள் நியமித்து ஜனசபையாலே நடத்தும் அரசாட்சியுரிமை ஹிந்துகளுக்குக் கிடையாது. ஹிந்துக் இளுக்குப் புத்தி சொற்பம். நம்முடைய தேசத்தில் ஆண் பிள்ளைகளுக்குக் கிடையாத மேற்படி வாக்குச் சீட்டுச் சுதந்திரம் வேறு சில தேசங்களிலே பெண்களுக்கு உண்டு.