பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 அதாவது, அரசாட்சி இன்னபடிதான் நடக்கவேண்டு மென்று நியமிக்கும் பாத்தியதை அங்கே ஸ்திரீகளுக்கும் உண்டு. 'ஆஸ்திரேலியா, ந்யூஸிலாந்து, டென்மார்க், நார்வுே யுனைடெட் ஸ்டேட்ஸிலே பாதி, கானடா-இத்தனை தேசங் களில், பெண்களுக்கு வாக்குச் சீட்டு கெட்டியாகவுண்டு இங்கிலாந்திலேகூட அந்த அநுஷ்டானத்தை ஏற்படுத்த வேண்டுமென்று பலர் மன்ருடுகிருர்கள். போன மந்திரி ஆஸ்க்வித்கூட அந்தக் கட்சியை நெடுங்காலமாக எதிர்த்து வந்து, ஸ்மீபத்தில் அதற்கனுகூலமாகப் பேசுகிரு ரென்று கேள்வி. இதை விடுங்கள். 'துருக்கி தேசம் தெரியுமா? அங்கே நேற்று வரை ஸ்திரிகளை மூடிவைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரை களை டப்பியில் போட்டு வைத்திருக்கிருர்களோ இல்லையோ? அந்த மாதிரி; திறந்தால் வாசனை போய்விடும் என்று நம்முடைய தேசத்திலேயேகூட அநேக ஜாதிக்காரர் அந்த மாதிரிதானே செய்கிருர்கள். ஹிந்து ஸ்திரீ ஏறக் குறைய அடிமை நிலைமையிலிருக்கிருள். நம்முடைய வீடு களில் அறைக்குள் அடைத்து வைப்பது கிடையாது. அறைக்குள்ளேதான் இருந்தாலென்ன, குடிகெட்டுப் போச்சுது? அடிமையைத் தண்ணிர் கொண்டுவர தெரு விலே விட்டால்தானென்ன? அதுவும் கூடாதென்று கதவைப்பூட்டிக் கைதியாக வைத்திருந்தாலென்ன? எந்த் நிலைமையிலிருந்தாலும் அடிமை அடிமைதானே ஸ்வாமி மனுஷ்ய ஜீவனுக்கு இரண்டுவித நிலைமைதான் உண்டு. எதுவும் தன்னிஷ்டப்படி செய்து, அதனால் ஏற்படக்கூடிய இன்ப நஷ்டங்களுக்குத் தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை; அதுதான் சுதந்திரம். அப்படி இல்லாமல் பிறர் இஷ்டப்படி, தான் இஷ்டமிருந்தாலும் இல்லா