பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


71 விட்டாலும் மீறி நடக்கக்கூடாதபடி கட்டுப்பட்டிருத்தல்; அடிமை நிலை. அந்த ஸ்திதியில் நம்முடைய ஸ்திரீகளை வைத்திருக்கிருேம். சும்மா பொய்க்கதை சொல்வதில் பிரயோஜனமென்ன, ஸ்வாமி? நம்முடைய ஸ்திரீகள் அடிமைகள், அதிலே சந்தேகமில்லை. ஹிந்துக்களுக் குள்ளே புருஷர்களுக்கே அரசாட்சியில் வாக்குச் சீட்டுக் கிடையாது. அவர்களுக்குள்ளே ஸ்திரீகள் அடிமைகள். ஹிந்து ஸ்திரீகளைக் காட்டிலும் இப்போது துருக்கி ஸ்திரீகள் நல்ல நிலைமையில் வந்திருக்கிரு.ர்கள். மிஸ். எல்லிஸன் என்ருெரு இங்கிலீஷ்காரி ஒரு புஸ்தகம் போட்டு, நேற்றுத்தான் ஒரு பத்திரிகையில் அந்தப் புஸ்தகத்தைப் பற்றி அபிப்பிராயம் போட்டிருந்தது. அந்த அபிப்பிராயம் எழுதினவர் ஒரு சிங்களத்துப் பெளத்தர். அவர் பெயர் ஜினராஜதாஸர். அவர் ஒரு இங்கிலீஷ்காரியைக் கலியாணம் பண்ணிக்கொண்டிருக்கிருர். துருக்கி ஸ்திரீகள் படிப்பு, ராஜியப் பொறுப்பிலே ஊக்கம் முதலிய சகல அம் சங்களிலேயும் போதுமானபடி விருத்தியாய்க் கொண்டு வருவதாக அந்த இங்கிலீஷ் புத்தகத்தில் போட்டிருப்பதாக அந்த பெளத்தர் சொல்லுகிரு.ர். ஐயோ, ராமா, ராகவா, கேசவா, விசுவாமித்திரா!- நமக்கு சந்தியா வந்தனம் கொஞ்சம் மறதி; ஆண்களுக்கு அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை. இங்ங்னம், அவர் பிரசங்கத்தில் கொஞ்சம் மூச்சு வாங்கும் பொருட்டாக, ஒரு விகட வார்த்தை சொன்ன இடனே, அவருடைய முக்கிய சிஷ்யராகிய கொங்கண பட்டர் கொல்லென்று சிரித்தார். வீராசாமி நாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒரு குட்டுக் இட்டி ஒரு தரத்துக்குப் பொடி போட்டுக் கொண்டார். வாத்தியார் மறுபடியும் கோஷிக்கலானர் : -