பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 3 ாகக் குடித்தனம் பண்ணும் ஜனக் கூட்டத்துக்குள்ளே ஸ்திரீகள் சுயேச்சையாகப் பேசலாம், சுயேச்சையாக லஞ்சரிக்கலாம் என்று வைக்கவேண்டும். அது ஸாத்ய றாகும்படி புருஷரைத் தண்டிக்க வேண்டும். கையாலாகாத பேரை தண்டிப்பதிலே என்ன பிரயோஜனம், ஸ்வாமி? எத்தனை நாள் இந்த தேசத்தில் பழங்குப்பையில் முழுகிக் திடக்கப் போகிருர்கள்? நத்தைப் புழுவைப்போல ஆணும் பெண்ணும் கூடப் பிறக்கிருேம். உடன் பிறந்தான் ஆண்டான், உடன் பிறந்தவள் அடிமை, ஸ்வாமீ? சுத்த பாமரஜனங்கள்' என்று சோனமாரியாகப் பொழிந்தார். இந்த சமயத்தில் என்னுடைய குழந்தை வீட்டிலிருந்து ஓடி வந்து என்ன சாப்பிடக் கூப்பிட்டது; நான் எழுந்தேன். 'பிரமராய வாத்தியார் சொல்லுகிற விஷயத்தைக் குறித்து உம்முடைய அபிப்ராயமென்ன?” என்று என்னை நோக்கிக் கொங்கணப்பட்டர் கேட்டார். நான் சொல்லத் தொடங்கு முன்னே, வீராசாமி நாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒரு குட்டுக்குட்டி, "நீர் சும்மா இருமே, ஒய்" என்று சொன்னர். பிறகு நான் : - பூலோகத்துப் பஞ்சாயத் தெல்லாம் எனக்கு வேண்டியதில்லை ஸ்வாமி, யாருக்கு என்ன காரியம் சித்தியாக வேண்டுமானலும், ஓம் சக்தி, ஓம் சக்தி என்று சொன்னல், அவர்களுக்கு அந்தக் காரியம் சித்தியாகும். இதுதான் எனக்குத் தெரிந்த விஷயம்" என்றேன். பிரமராய வாத்தியார் 'அது உண்மை' என்ருர். இடிப்பள்ளிக்கூட முழுவதும் "வாஸ்தவந்தான் என்று இப்புக்கொண்டது. நான் போஜனத்திற்குப் புறப் ட்டேன். Lum.–5