பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 உண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று நினைக்கிருர்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நி.ை கிருர்கள். இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும் திட்டியும், சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படி அவை செய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா சில தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிருர்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜபக்தி செலுத்த வேண்டுமென்றும், அங்ங்னம் பக்தி செய்யாவிட்டால், சிறைச்சாலையிலே போ டு வே . . என்றும் சொல்லுகிருர்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிருர்கள். அந்த அரசு போலேதான், ஸ்திரீகள் மீது புருஷ! செய்யும் கட்டாய ஆட்சியும் என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும். கட்டாயப்படுத்தி, என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா? ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்i டினல், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்து வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மை! போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினலே அடிமை! பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனயினும், குருவி யினும், புருஷனயினும் மூடனைத் தவிர வேறில்: அவனுடைய நோக்கம் நிறைவேறது. அச்சத்திஞ்: மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலு: உள்ளே துரோகத்தை வைத்துக்கொண்டுதான் இருக்கு அச்சத்தினல் அன்பை விளைவிக்க முடியாது.