பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


77 பெண் விடுதலை (1) இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டதென்று சில தினங்களின் முன்பு ராய்டர் தந்தி வந்தது. அதைப்பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று 'ஸ்திரிகளின் ஜயம்" என்ற மகுடத்துடன் கதேசமித்திரன் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. நற்று மாலை நானும் என்னுடைய சினேகிதர் சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி (அதாவது "ஸ்திரீகளின் ஜயம்" எழுதியிருந்த) சுதேச நித்திரன் பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினி வேதவல்லி அம்மை வந்தார். வேதவல்லி அம்மைக்கு நாற்பது: வயது. தமிழிலும் இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸ்மஸ்கிருதம் கொஞ்சம் தெரியும். இவளுடைய புருஷன் கோபாலய்யர் பெரிய ஐக்கார் உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமது பத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுடனும் செளக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்துவருகிருர். வேதவல்லிக்கு அவர் விடுதலை கொடுத்து விட்டார். எங்கும் போகலாம், யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரியமெல்லாம் ஒரு கிழவி பார்த்துக்கொள்கிருள். வேதவல்லி அம்மை புஸ்தகம், பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக் கிட்டம் முதலியவற்றிலே காலங்கழித்து வருகிரு.ர். வேதவல்லி வரும்போது நான் ராமராயர் முதலியவர் குடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்கு ங்கராச்சாரியார் எழுதின அத்வைத பாஷ்யத்தை ரசித்து அதன் சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண் ருந்தேன். அந்தச் சமயத்தில் வேதவல்லியார் வந்தனர்.