பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


81 விவகாரங்களிலே தலையிட்டால் ஆனி பெஸண்டுக்கு ஸ்மானமாக வேலை செய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்த விசாரணைக்கும் குமாஸ்தா வேலைக்கும் தான் உபயோகப்படுவார்கள். ராஜ்ய rேமத்தைக் கருதி தைர்யத்துடன் கார்யம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமை இத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவு தைரியமாகப் பேசுகிருர்கள், பார்த்தீர் களா? உலகத்தில் எங்குமே புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும், தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில் எப்படியான லும், இங்கே பெண்ணுக்குள்ள தைர்யமும் புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் பெண்கள் ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச் சீட்டு வாங்கி விட்டார்கள். ஹோ ஹோ! அடுத்த தடவை இங்கிருந்து காங்கிரஸ் காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப் போகும் போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சினல் போதாது. ஸ்திரீகளைக் கெஞ்சவேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர் மாத்திரம் போனல் நடக்காது. இந்த தேசத்துப் புருஷர் களைக் கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்கமாட்டார்கள். ஆதலால், காங்கிரஸ் ஸ்பையார் நமது ஸ்திரீகளை அனுப்பு வதே நியாயம். எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னை அனுப்பினுல் நான் போய் அங்குள்ள பெண் சீட்டாளி களிடம் மன்ருடி இந்தியாவுக்கும் சீட்டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண் பெருமை பெண்ணுக்குத் தெரியும். உங்களிடம் சொல்லிப் பிரயோஜனம் இல்லை" என்று சொன்னாள். ராமராயர்:-"வேறு விஷயம் பேசுவோம் என்ருர். தான் பாதி பேசும்போது, ராமராயர் தடுத்துப் பேசியதி