பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 விஷயமென்ன என்று பலர் சங்கிக்கலாம். இங்ங்ணம் சங்கையுண்டாகும்போது விடுதலையாவது யாது? என்ற மூலத்தை விசாரிக்கும்படி ேநரி டு கி ற து. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகு சுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும், மற்றபடி ஏறக்குறைய நான் ஏது பிரிய மாலுைம் செய்யலாம்' என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனுகக் கணக்கிடத் தகும். பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்ட மானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை’ என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் சொல்லுகிரு.ர். இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையான ஆண் மக்களுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனல் இவ்விடுதலை பெறும்பொருட்டாக நாடுதோறும் ஆண் மக்கள் பாடுபட்டு வருகிருர்கள். ஆண் மக்கள் ஒருவருக் கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்க முடியாது. ஆனால், இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக் காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள் பெண்கூட்டத்தை ஆண்கூட்டம் அடிமைப்படுத்தி வைத் திருப்பதால் விளைகின்றன. அடிமைத் தேசங்களிலேகூட ஆண்மக்களிற் பெரும் பாலோர்-அதாவது ரஹஸ்யப் போலீஸ்உபத்திரவத்திற்கு இடம் வைத்துக்கொண்டவர் தவிர மற்றவர்கள்-தம் இஷ்டப்படி எந்த ஊருக்குப் போகவேண்டுமானலும், போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம். தனியாக சஞ்சாரம் பண்ணக் கூடாதென்று நியதி கிடையாது. ஆனல் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாத தேசங்